ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

பாலைத்திணை


341.
அவரோ வாரார் தான்வந் தன்றே
குயிற்பெடை இன்குரல் அகவ
அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே.

342.
அவரோ வாரார் தான்வந் தன்றே
சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே.

343.
அவரோ வாரார் தான்வந் தன்றே
திணிநிலைக் கோங்கம் பயந்த
அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே.


344.
அவரோ வாரார் தான்வந் தன்றே
எழில்தகை இஅள்முலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.

345.
அவரோ வாரார் தான்வந் தன்றே
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்
மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.

346.
அவரோ வாரார் தான்வந் தன்றே
அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச்
செங்கண இருங்குயில் அறையும் பொழுதே.

347.
அவரோ வாரார் தான்வந் தன்றே
எழில்தகை இளமுலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.

348.
அவரோ வாரார் தான்வந் தன்றே
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் 
மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.

349.
அவரோ வாரார் தான்வந் தன்றே
பொரிகால் மாஞ்சினை புதைய
எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.

350.
அவரோ வாரார் தான்வந் தன்றே
வேம்பின் ஒண்பூ உறப்பத் 
தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே.