ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

நெய்தல்திணை


131.
நண்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாஅக் காலே.

132.
அம்ம வாழி பாண புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றுஅவர் அருளு மாறே.

133.
யானெவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனஎன் புரிவளைத் தோளே.

134.
காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி
நெடுந்தேர்க் கொண்க னோடு
தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே.

135.
பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே.

136.
நாணிலை மன்ற பாண நீயே
கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த 
கானலம் துறைவற்குச் சொல்உகுப் போயே.

137.
நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்
திண்தேர்க் கொண்கனை நய்ந்தோர்
பண்டைத் தந்நலம் பெறுபவோ.

138.
பண்பிலை மன்ற பாண இவ்வூர்
அன்பில கடிய கழறி
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே.

139.
அம்ம வாழி கொண்க எம்வயின் மாண்நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே.

140.
காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை 
துறைகெழு கொண்கன் பிரிந்தென
விறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே.