ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

முல்லைத்திணை


421.
மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்
புன்புல நாடன் மடமகள்
நலங்கினர் பணைத்தோள் விலங்கின செலவே.

422.
கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி
நெடுங்கொடி முல்லையொடு தளவமதிர் உதிர 
விரையுபு கடை இநாம் செல்லின் 
நிரைவளை முன்கை வருந்தலோ இலளே.

423.
மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே
வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே
யாமே நிந்துறந்து அமையலம் 
ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே.

424.
புறவணி நாடன் காதல் மடமகள்
ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப்
போதவிழ் தாமரை அன்னநின்
காதலன் புதல்வன் அழும்இனி முலைக்கே 


425.
புன்புறப் பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம்
வல்லை நெடுந்தேர் கடவின்
அல்லல் அருநோய் ஒழித்தல் எமக் கெளிதே.

426.
வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினி
நன்னுதல் யானே செலஒழிந் தனனே
முரசுபாடு அதிர ஏவி
அரசுபடக் கடக்கும் அருஞ்சமத் தானே.

427.
பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே
காரெதிர் ஦ஒழுதென விடல்ஒல் லாயே 
போருடை வேந்தன் பாசறை 
வாரான் அவனெனச் செலவழுங் கினனே.

428.
தேர்செல அழுங்கத் திருவில் கோலி
ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே
வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய
யாந்தொடங் கின்னால் நின்புரந் தரலே.

429.
பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல்கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வெந்துபகை வெலற்கே.

430.
நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை 
அடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும்
கான்கெழு நாடன் மகளோ
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே.